
Monday, March 28, 2011
நனோரச் தொடுதிரை தொழில்நுட்பம்
இணையத்தில் புத்தகம் படிக்க ஓர் தளம்
இந்த தளத்தில் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேர்வு செய்து அந்த புத்தகத்தை அப்படியே ஈபுக்காக படிக்கத்துவங்கி விடலாம்.இதற்காக தனியே எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய தேவையில்லை. ஏன் படிக்கப்போகும் புத்தகத்தை கூட டவுண்லோடு செய்ய தேவையில்லை. புத்தகத்தை தேர்வு செய்த பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த புத்தகத்தை படிக்கத்துவங்கி விடலாம்.அதற்கான ரீடர் அதே பக்கத்தில் தோன்றுகிறது.என்வே பிரவுசரை விட்டு வெளியே செல்லவும் தேவையயில்லை.பக்கங்களை திருப்புவது போல ஒவ்வொரு பக்கமாக கிளிக்செய்து படித்துக்கொண்டே இருக்கலாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது.
இத்தளத்திற்கான இணைய முகவரி இதோ
Sunday, March 27, 2011
போர்லுக் தேடலியந்திரம்
போர்லுக் புதிய தேடியந்திரம் தான்.ஆனால் கூகுலுக்கு போட்டியானது அல்ல.கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம்.இதன் முகப்பு பக்கம் கூகுலை விட எளிமையாக இருக்கிறது.முதல் எழுத்தை அடிக்க துவங்கியதுமே தேடப்படும் சொல் இதுவாக தான் இருக்கும் என்ற கணிப்பில் அந்த சொல்லுக்கு உரிய தேடல் முடிவுகள் அணிவகுக்கின்றன.பொருந்தக்கூடிய பிற சொற்களும் கொடுக்கப்படுகின்றன. கூகுலை தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம்.எப்படியும் இந்த தேடியந்திரம் முதலில் முன்வைப்பது கூகுல் தரும் முடிவுகளை தான்.
இணையதள முகவரி;http://www.forelook.com
Subscribe to:
Posts (Atom)